உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழில் நிறுவனங்கள் உரிமம் பெற அறிவுரை

தொழில் நிறுவனங்கள் உரிமம் பெற அறிவுரை

உடுமலை: உடுமலை நகராட்சி பகுதிகளிலுள்ள தொழில் நிறுவனங்கள் உரிமம் பெற்றுக்கொள்ள வேண்டும், என அறிவுறுத்தப்பட்டுள்ளது.உடுமலை நகராட்சியில், 33 வார்டுகளில், 74 ஆயிரத்து, 500 பேர் வசிக்கின்றனர், இங்கு, 18 ஆயிரத்து, 670 வீடுகளும், 3,068 வணிக நிறுவனங்கள் உள்ளன.இந்நிறுவனங்களின், வணிக உரிமம் வாயிலாக, ஆண்டுக்கு, ரூ. 20 லட்சம் வரை வருவாய் கிடைக்கிறது.ஒவ்வொரு ஆண்டும், பிப்., மாதத்திற்கும் வணிக நிறுவனங்கள், வணிக உரிமம் புதுப்பிக்க வேண்டும். வணிகம் அடிப்படையில், மளிகைக்கடை, ரூ.700 முதல், 3 ஆயிரம் வரையும், உணவகம், ரூ.3ஆயிரம் முதல் 5 ஆயிரம், தங்கும் விடுதி, 3 ஆயிரம் முதல், 10 ஆயிரம் வரையும்,மருந்து கடைகள். ரூ.700 முதல், 3 ஆயிரம், ஜவுளிக்கடைகளுக்கு, ரூ.3 ஆயிரம் முதல், 5 ஆயிரம் என தொழில் நிறுவனங்களுக்கு ஏற்ப, உரிமத்தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.வணிக உரிமம் பிப்., மாதத்திற்குள் புதுப்பிக்க வேண்டும் என்பதால், குறைந்த நாட்களே உள்ளன.மார்ச், 1ம் தேதிக்கு பின், உரிமம் பெற, நிர்ணயிக்கப்பட்ட தொகையில், 25 சதவீதம் அபராதத்துடன் செலுத்த வேண்டும்.எனவே, வணிக நிறுவன உரிமையாளர்கள் உடனடியாக நகராட்சியில், உரிய படிவம் வாயிலாக, தொழில் உரிமம் கட்டணம் செலுத்த வேண்டும், என நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை