உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அமராவதி அணை நிரம்பியது அமராவதி அணை உபரி நீர் வெளியேற்றம்

அமராவதி அணை நிரம்பியது அமராவதி அணை உபரி நீர் வெளியேற்றம்

உடுமலை:உடுமலை அமராவதி அணை நிரம்பியதையடுத்து, உபரி நீர் வெளியேற்றப்பட்டது.அமராவதி அணை நிரம்பியதையடுத்து, நேற்று மாலை, 5:30 மணிக்கு, உபரி நீர் வெளியேற்றப்பட்டது. தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்ததால், வெளியேற்றமும் அதிகரிக்கப்பட்டது. மாலை, 6:00 மணி நிலவரப்படி, மொத்தமுள்ள, 90 அடியில், 86.36 அடி நீர்மட்டமும், மொத்த கொள்ளளவான, 3,720 மில்லியன் கனஅடி நீர் இருப்பு இருந்தது.அணைக்கு வினாடிக்கு, 8,225 கன அடி நீர் வரத்து இருந்தது. வெள்ள காலங்களில் அணை பாதுகாப்பு கருதி, 3 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டது.அதிகாரிகள் கூறுகையில்,' அணை நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கன மழை பெய்து வருவதால், தொடர்ந்து நீர் வரத்து அதிகரித்து வருகிறது. இதனால், அணை பாதுகாப்பு கருதி உபரி நீர் வெளியேற்றப்படுகிறது. தொடர்ந்து அணை நீர் வரத்து கண்காணிக்கப்பட்டு, உபரி நீர் வெளியேற்றம் அதிகரிக்கப்படும்,' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !