உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலை இலக்கிய திறனாய்வு போட்டி: பல்லடம் அரசு பள்ளியில் குளறுபடி

கலை இலக்கிய திறனாய்வு போட்டி: பல்லடம் அரசு பள்ளியில் குளறுபடி

பல்லடம்;பல்லடத்தில் நடந்த கலை இலக்கிய திறனாய்வு போட்டியில், சரியான ஒருங்கிணைப்பு இன்றி, குளறுபடி ஏற்பட்டது.மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், பள்ளி மாணவ மாணவியருக்கான, கலை இலக்கிய திறனாய்வு போட்டிகள், பல்லடம் அரசு பெண்கள் மேல் நிலைப் பள்ளியில் நடந்தன. இதில், 1 முதல் 12ம் வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கு, பல்வேறு தலைப்புகளில், ஓவியம், கட்டுரை மற்றும் கவிதை போட்டிகள் நடத்தப்பட்டன. அரசு தனியார் பள்ளிகளைச் சேர்ந்த, 900க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் இதில் பங்கேற்றனர்.போட்டியில் பங்கேற்க வேண்டி பெற்றோருடன் வந்த மாணவ, மாணவியர் எங்கு செல்வது, யாரை அணுகுவது என்று தெரியாமல் அலைமோதினர். இதனால், போட்டி தேர்வுகள் தாமதமாகவே துவங்கின. போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கு வழங்கப்பட வேண்டிய வினாத்தாள்கள் பற்றாக்குறை ஏற்பட்டது. இதனால், பெரும்பாலான மாணவ, மாணவியர் வகுப்பறைகளில் காத்திருந்தனர்.தொடர்ந்து, திருப்பூரில் இருந்து வினாத்தாள்கள் வரவழைக்கப்பட்டு வழங்கப்பட்டது. சரியான ஒருங்கிணைப்பு இல்லாததால், மாணவர்கள் தேர்வு எழுதிக் கொண்டிருக்க பெற்றோரும் வகுப்பறைகளை சூழ்ந்திருந்தனர்.இவ்வாறு, திறனாய்வு போட்டிகள், ஏதோ கண்காட்சி போல காணப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை