உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இடுவம்பாளையம் பகுதி மின் நுகர்வோர் கவனத்துக்கு...

இடுவம்பாளையம் பகுதி மின் நுகர்வோர் கவனத்துக்கு...

திருப்பூர் : இடுவம்பாளையம் பகுதி மின்நுகர்வோர், நவ., மாத கட்டணத்தையே செலுத்தலாம் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.வீரபாண்டி உபகோட்டத்துக்கு உட்பட்ட இடுவம்பாளையம் பிரிவு அலுவலகத்துக்கு உட்பட்ட பகுதியில், நிர்வாக காரணங்களால் மின் கணக்கீடு செய்ய இயலவில்லை. எனவே, நவ., மாத கட்டணத்தையே செலுத்தலாம் என, மின்வாரியம் அறிவித்துள்ளது.செயற்பொறியாளர் ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'இடுவம்பாளையம், காமாட்சிநகர், கே.என்.எஸ்., நகர், ஆர்.கே.,கார்டன் ரோடு, சக்திகார்டன், கொக்குப்பாறை, அண்ணா நகர், ஜீவா நகர், கிரீன் அவென்யூ, மகாலட்சுமி நகர், தனலட்சுமி நகர், வஞ்சிபாளையம், அம்மன்நகர், தாந்தோனி அம்மன் நகர், சாந்திநகர், ஸ்ரீசக்தி அவென்யூ, கார்த்திக் நகர், ஸ்ரீநிதிகார்டன், எவர்கிரீன் அவென்யூ பகுதி மக்கள், கடந்த நவ., மாதம் செலுத்திய கட்டணத்தையே, இம்மாத கட்டணமாக செலுத்தலாம்' என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை