| ADDED : ஜன 25, 2024 06:20 AM
அவிநாசி : அவிநாசி கோவில் கும்பாபிேஷகத்தை முன்னிட்டு அன்னதானம் வழங்குவது குறித்த ஆலோசனைக் கூட்டம், பேரூராட்சி அலுவலகத்தில் நடந்தது.உணவு பாதுகாப்பு துறை அலுவலர் (பொறுப்பு) கிருஷ்ணமூர்த்தி, பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கருப்புசாமி முன்னிலை வகித்து, கூறியதாவது:n உணவு தயாரிக்க தரமான சமையல் பொருட்கள், தண்ணீர் மட்டுமே பயன்படுத்த வேண்டும். நான்கு ரத வீதிகளில் வாகனங்கள் மூலம் அன்னதானம் வழங்கக் கூடாது.n பேரூராட்சி நிர்வாகத்தில் அனுமதிச்சீட்டு பெற்று குடிநீர், உணவு தயாரிக்க பெற்றுக் கொள்ளலாம். மீதமான உணவுப் பொருட்களை சாலைகளில், பொது இடங்களில் கொட்டக்கூடாது.n உணவு பாதுகாப்பு துறை மூலம் உணவு மாதிரிகள் சேகரிக்கப்படுவதால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் தரமான பொருட்களை கொள்முதல் செய்து பயன்படுத்தி அன்னதானம் தயாரிக்க வேண்டும்.கூட்டத்தில், தி.மு.க., முன்னாள் நகர செயலாளர் பொன்னுசாமி, கவுன்சிலர் கோபாலகிருஷ்ணன், அவிநாசிலிங்கேஸ்வரர் தேர்த்திருவிழா அன்னதான கமிட்டி தலைவர் நடராஜன், நிர்வாகி அப்புசாமி, குலாலர் கல்யாண மண்டப நிர்வாகி குழந்தைவேலு, ஸ்ரீ கருணாம்பிகை அன்னதான கமிட்டி சேகர், வெங்கடாசலம், கோவம்ச திருமண மண்டப மேலாளர் வேலுசாமி, பூவாசாமி கவுண்டர் மண்டபம் பொன்னுசாமி, தேவேந்திரகுல வேளாளர் மண்டபம் லோகேஷ் உட்பட பலர் பங்கேற்றனர்.