உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கும்பாபிேஷகம்:உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்!

அவிநாசி கும்பாபிேஷகம்:உள்ளூர் விடுமுறை அளிக்க வேண்டும்!

திருப்பூர்;வரும் 2ம் தேதி திருப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கவேண்டும் என்கிற கோரிக்கை எழுந்துள்ளது.இது குறித்து, ஹிந்துமுன்னணி திருப்பூர் மாநகர் மாவட்ட செயலாளர் கேசவன், கலெக்டர் கிறிஸ்துராஜிடம் அளித்துள்ள மனு:சுந்தரமூர்த்தி நாயனாரால் பாடல்பெற்ற, கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான அவிநாசி ஸ்ரீ அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா, வரும் 2ம் தேதி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியில், லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்க உள்ளனர். எனவே, கும்பாபிஷேகம் நடைபெறும் நாளில், உள்ளூர் விடுமுறை அளித்து, அறிவிப்பு வெளியிடவேண்டும்.கும்பாபிேஷக நிகழ்ச்சிகளில், சுவாமி வீதியுலா நிகழ்ச்சி நடைபெற உள்ளதால், அன்றைய தினம் அவிநாசி கோவிலை சுற்றியும், நான்கு ரத வீதிகளிலும் உள்ள இறைச்சிக்கடை, மதுபான கடைகளை மூட உத்தரவிட வேண்டும்.இவ்வாறு, அதில் அவர் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை