உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அவிநாசி கும்பாபிேஷக விழா: 2ம்  தேதி உள்ளூர் விடுமுறை

அவிநாசி கும்பாபிேஷக விழா: 2ம்  தேதி உள்ளூர் விடுமுறை

திருப்பூர்:அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்துக்கு வரும், 2ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.கொங்கேழு சிவாலயங்களில் முதன்மையான, திருப்புக்கொளியூர் எனும் அவிநாசியில், பெருங்கருணை நாயகி உடனமர் அவிநாசிலிங்கேஸ்வரர் சுவாமி கோவில் கும்பாபிஷேக விழா, வரும், 2ம் தேதி நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு, திருப்பூர் மாவட்டத்துக்கு உள்ளூர் விடுமுறை அறிவித்துள்ளது.இதுகுறித்து கலெக்டர் கிறிஸ்துராஜ் வெளியிட்டுள்ள அறிக்கை:திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் உள்ள, அவிநாசிலிங்கேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு, வரும், 2ம் தேதி, திருப்பூர் மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்படுகிறது. உள்ளூர் விடுமுறை நாளில், அரசு அலுவல்களை கவனிக்கும் வகையில், மாவட்டத்திலுள்ள கருவூலம், சார்நிலை கருவூலங்கள், குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். உள்ளூர் விடுமுறைநாளுக்குபதிலாக, வரும், 3ம் தேதி (சனிக்கிழமை), பணி நாளாக செயல்படும்.இவ்வாறு, அவர் அதில் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை