உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கடைமடையை அடைந்தது பி.ஏ.பி., பாசன தண்ணீர்

கடைமடையை அடைந்தது பி.ஏ.பி., பாசன தண்ணீர்

பொங்கலுார் : பி.ஏ.பி., வாய்க்காலில் ஆண்டுதோறும் ஜன., மாதத்திலேயே தண்ணீர் திறப்பது வழக்கம். இந்தாண்டு மழை குறைவு காரணமாக போதுமான தண்ணீர் இருப்பு இல்லை. எனவே, பி.ஏ.பி., முதல் மண்டல பாசனத்துக்கு தண்ணீர் திறக்க அரசு கால தாமதம் செய்தது.இதற்கிடையே உப்பாறு பகுதி விவசாயிகள் தங்களுக்கும் தண்ணீர் விட வேண்டும் என்று போராட்டம் நடத்தி வருகின்றனர். ஆயக்கட்டு பகுதிக்கு தண்ணீர் திறக்க வலியுறுத்தி, பாசன விவசாயிகள் போராட துவங்கியதும் அரசு முதல் மண்டல பாசனத்திற்கு தண்ணீர் திறக்க உத்தரவிட்டது.பி.ஏ.பி., வாய்க்காலில், கடந்த, 12ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது. அது பொங்கலுார் வழியாக, காங்கயம், வெள்ள கோவில் பகுதி வரை சென்றுள்ளது.இதனால், வறட்சியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இது விவசாயிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை