உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பி.ஏ.பி. நீர் தேவை பூர்த்தியாக எளிய யோசனை

 பி.ஏ.பி. நீர் தேவை பூர்த்தியாக எளிய யோசனை

திருப்பூர்: ''பி.ஏ.பி., பாசன திட்டத்தில் நீர்மேலாண்மையில் சிறிதளவு மாற்றம் செய்வதன் வாயிலாக, 2027 வரை பாசனத்துக்கான நீர் தேவையை பூர்த்தி செய்ய முடியும்'' என, தமிழக நீர் மேலாண்மைக்குழு முன்னாள் உறுப்பினர் திவ் யார் நாகராஜன் கூறினார்.

அவர் கூறியதாவது:

பி.ஏ.பி., எனப்படும் பரம்பிக்குளம் - ஆழியாறு நீர் பாசனத்தில், முன்னெப்போதும் இல்லாத வகையில், கடந்த ஆறு மாதமாக அனைத்து தொகுப்பு அணைகளிலும், 95 சதவீதம் தொடர்ச்சியாக நீர் இருந்து கொண்டிருக்கிறது. இக்கால கட்டத்தில், பி.ஏ.பி., அதிகாரிகளின் நீர் மேலாண்மை மற்றும்பராமரிப்பும் பாராட்டும் படி உள்ளது. தற்போதைய சூழலில், உடனடியாக சில நீர் மேலாண்மை மாறுதல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. தற்போதைய நிலவரப்படி, 5.5 டி.எம்.சி., கொள்ளளவு கொண்ட, தமிழக எல்லைக்குள் உள்ள சோலையார் அணையில், 3.5 டி.எம்.சி., தண்ணீர் தான் உள்ளது; 2 டி.எம்.சி., காலியாக உள்ளது. 72 அடி உயரமுள்ள பரம்பிக்குளம் அணையில், 70.8 அடி தண்ணீர் உள்ளது; இன்னும், அரை டி.எம்.சி., தண்ணீர் வந்தால் கூட அணை நிறைந்து, கேரளாவுக்கு உபரி நீரை வீணாக திறந்து விட வேண்டியிருக்கும். தற்போது சோலையாற்றில் இருந்து, மின் உற்பத்திக்கு திறந்து விடப்படும் 600 கன அடி நீரும், பரம்பிக்குளத்தின் சொந்த வரத்தான, 500 கன அடி நீரும் சோர்த்து, 1100 கன அடி நீர், பரம்பிக்குளம் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. இதில், 990 கன அடி நீர், அப்படியே துாணக்கடவு பெருவாரி பள்ளம் வழியாக, திருமூர்த்தி அணைக்கு பாசனத்திற்காக விடப்படுகிறது. என்ன செய்ய வேண்டும்? பெருவாரி பள்ளமும், துாணக்கடவும் சேர்ந்து, மொத்தம், 1.25 டி.எம்.சி., கொள்ளளவு முழுமையாக நிரம்பியுள்ளது. பரம்பிக்குளத்திற்கு இதற்கு மேல் தண்ணீர் வந்தாலும், கான்டூர் கால்வாயின் மொத்த கொள்ளளவான, 1,000 கன அடிக்கு மேல் திறந்து விட முடியாது. வரும், 8ம் தேதி (டிச.,) வரையும், அடுத்த மாதம் (ஜன.), 15ம் தேதி வரையும், வால்பாறை மற்றும் பி.ஏ.பி., நீர்பிடிப்பு பகுதிகளில் மழைப்பொழிவு இருக்கும் என வானிலை ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர். எனவே, சோலையாற்றில் இருந்து பரம்பிக்குளத்திற்கு திறந்து விடப்படும், வினாடிக்கு, 600 கன அடி நீரை உடனடியாக நிறுத்தி, சோலையாற்றில் தேக்குவதன் வாயிலாக, தினமும், 2,000 முதல், 3,000 கன அடி அளவுக்கு மழைநீர் வந்தாலும் கூட, காலியாக உள்ள,2 டி.எம்.சி., கொள்ளளவு தான் நிரம்பும். 2.5 டி.எம்.சி. சேமிக்கலாம் அதன் பிறகு, சேடல் டேம் வழியாக, வினாடிக்கு, 7,000 கன அடி நீரும், நீர் மின் நிலையத்தின் மூலம், 1,000 கன அடி நீரும் பரம்பிக்குளம் அணைக்கு திறந்து விடலாம்; இதனால், பாசனத்திற்கான நீர் பற்றாக்குறையை பூர்த்தி செய்ய முடியும். இதன் வாயிலாக, பரம்பிக்குளத்தில் இருந்து உபரியாக வெளியேறும், 2.5 டி.எம்.சி., நீரை சேமிக்க முடியும். இதுவரையில்லாத வகையில், அடுத்தாண்டு (2026) மார்ச் வரை, 75 சதவீதம் வரை தண்ணீரை இருப்பு வைத்து, அந் தாண்டு ஜூன் மாதம் பருவமழையில் கிடைக்கும் நீரையும் சேமித்து, 2027ம் ஆண்டு, பாசனம் வரையிலான நீர் தேவையை பூர்த்தி செய்து, விவசாயிகளின் நலன் காக்க முடியும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை