உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெங்களூரு வந்தே பாரத் ரயில் திருப்பூர் வரும் நேரம் மாற்றம்

பெங்களூரு வந்தே பாரத் ரயில் திருப்பூர் வரும் நேரம் மாற்றம்

திருப்பூர்;கோவை - பெங்களூரு வந்தே பாரத் ரயில், திருப்பூரை கடந்து செல்லும் நேரம் மாற்றப்பட்டுள்ளது.கோவையில் இருந்து பெங்களூருக்கு இயக்கப்படும் வந்தே பாரத் ரயில் (எண்: 20642) காலை, 5:00 மணிக்கு கோவையில் புறப்பட்டு, 5:38 மணிக்கு திருப்பூரை கடந்து, ஈரோடு நோக்கி பயணித்தது. பயணிகள் வசதிக்காக இந்த ரயிலின் நேரம் மாற்றப்பட்டுள்ளது. இனி காலை, 7:25 மணிக்கு கோவையில் புறப்படும் ரயில், 8:03 மணிக்கு திருப்பூர் ஸ்டேஷன் வரும். மதியம், 1:50 மணிக்கு பெங்களூரு சென்றடையும்.மறுமார்க்கமாக பெங்களூரில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயில் (எண்:20641) மதியம், 1:40 க்கு பதிலாக, இனி, 2:20 மணிக்கு புறப்படும், இரவு, 7:31 மணிக்கு திருப்பூரை கடந்து, 8:20 மணிக்கு கோவை சென்று சேரும் என சேலம் கோட்ட அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை