| ADDED : ஜன 21, 2024 12:37 AM
அனுப்பர்பாளையம்:திருப்பூர் ஒன்றிய அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின், 107வது பிறந்தநாள் விழா கணக்கம் பாளையம் ஊராட்சி, பஸ் ஸ்டாப் அருகில் நடைபெற்றது.விழாவுக்கு, திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ., விஜயகுமார், தலைமை வகித்தார். மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர் பழனிசாமி வரவேற்றார். மாநகர் மாவட்ட செயலாளர் பொள்ளாச்சி ஜெயராமன், எம்.ஜி.ஆர்., படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி சிறப்புரை ஆற்றி, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்குதலை துவக்கி வைத்தார்.முன்னாள் எம்.எல்.ஏ., க்கள் பழனிசாமி, சிவசாமி, மாவட்ட இணை செயலாளர் சங்கீதா, துணை செயலாளர் பாலு, மாவட்ட கவுன்சிலர்கள் சாமிநாதன், கண்ணம்மாள், ஒன்றிய கவுன்சிலர் ஐஸ்வர்யா மகராஜ், ஒன்றிய பாசறை செயலாளர் சந்திரசேகர் உட்பட பலர் பங்கேற்றனர்.