உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ரோடு பணியில் முறைகேடு; கலெக்டரிடம் பா.ஜ., மனு

ரோடு பணியில் முறைகேடு; கலெக்டரிடம் பா.ஜ., மனு

உடுமலை:கணியூர் - கடத்துார் ரோட்டில், திட்ட வடிவமைப்பு, நிதி ஒதுக்கீடு அடிப்படையில் முழுமையாக பணி மேற்கொள்ள வேண்டும், என, பா.ஜ.,சார்பில் மனு அளிக்கப்பட்டது.பா.ஜ., மடத்துக்குளம் வடக்கு ஒன்றிய தலைவர் மணியன் மற்றும் நிர்வாகிகள் மாவட்ட கலெக்டர் மற்றும் அதிகாரிகளுக்கு மனு அளித்துள்ளனர். அதில், கூறியிருப்பதாவது:மடத்துக்குளம் தாலுகா, கணியூரில் இருந்து கடத்துார் செல்லும் ரோடு விரிவாக்கப்பணிகளுக்காக, 2.68 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. திட்டப்படி முழுமையாக பணிகள் நடக்காமல், அமராவதி ஆற்றுப்பாலம் வரை மட்டுமே மேற்கொள்ளப்பட்டுள்ளது.கடத்துார் அரசு பள்ளி வரை, விடுபட்ட பகுதியில் ரோடு அமைக்கவும், ஆஞ்சநேயர் கோவில் அருகே உள்ள கால்வாய் பாலத்தையும் விரிவாக்கம் செய்ய வேண்டும்.அமராவதி ஆற்றுப்பாலத்தில் பழுதடைந்துள்ள, தடுப்புச்சுவர்களை முழுமையாக புதுப்பிக்க, இத்திட்டத்தில் நிதி ஒதுக்கியும் பணி மேற்கொள்ளாமல், வர்ணம் மட்டும் பூசப்பட்டுள்ளது.இவ்வாறு, ரோடு விரிவாக்க பணியில் நடந்துள்ள முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்தவும், முழுமையாக பணிகளை முடிக்கவும் வேண்டும். கடத்துாரில் பழுதடைந்து, பாதுகாப்பற்ற முறையில் உள்ள அரசு துணை சுகாதார நிலையத்தை புதுப்பிக்க வேண்டும். இவ்வாறு, மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை