உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கலால் துறை கமிஷனருக்கு பூதக்கண்ணாடி பார்சல்

கலால் துறை கமிஷனருக்கு பூதக்கண்ணாடி பார்சல்

பல்லடம்;பல்லடம் வட்டாரத்தில் அனுமதியின்றி, விதிமுறை மீறி செயல்பட்டு வரும் 'பார்'களை அகற்ற வலியுறுத்தி, சமூக ஆர்வலர் கூட்டமைப்பினர், கலால் துறை ஆணையருக்கு 'பூதக்கண்ணாடி' பார்சல் அனுப்பி வைத்தனர்.இது குறித்து, கூட்டமைப்பின் தலைவர் அண்ணாதுரை கூறியதாவது:பல்லடம் வட்டாரத்தில், தேசிய மாநில நெடுஞ்சாலைகளில், தனியார் 'பார்'கள் விதிமுறை மீறி செயல்பட்டு வருகின்றன. ஆனால், பல்லடம் வட்டாரத்தில், தனியார் 'பார்'களே இல்லை என, தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் அதிகாரிகள் பதில் வழங்கியுள்ளனர்.இதேபோல், அரசு டாஸ்மாக் மது கடைகள் பலவற்றிலும், அனுமதியின்றி 'பார்'கள் இயங்கி வருகின்றன. இவற்றால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டு வருகிறது. அனுமதியின்றி, அரசு டாஸ்மாக் மது கடைகளில் செயல்பட்டு வரும் 'பார்'களை அகற்ற வேண்டும். தேசிய நெடுஞ்சாலையில் செயல்பட்டு வரும் தனியார் 'பார்'களை அகற்ற வேண்டும். இதற்காக, கலால் துறை ஆணையருக்கு, 'பூதக்கண்ணாடி' அனுப்பி வைத்துள்ளோம். இதனை பெற்றுக்கொண்ட பின்னராவது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை