உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தெரு நாய்களுக்கு இரையான கன்றுக்குட்டி

தெரு நாய்களுக்கு இரையான கன்றுக்குட்டி

பல்லடம்;பல்லடம் அடுத்த, கள்ளிப்பாளையம், துத்தேரிபாளையம் கிராமங்களில் சுற்றித்திரியும் தெரு நாய்கள் கடித்ததில் 2 கன்றுக்குட்டிகள் பலியாயின.இது குறித்து, விவசாயி சுரேஷ் என்பவர் கூறியதாவது:விவசாயத்துடன் கால்நடை வளர்ப்பு தொழிலும் செய்து வரும் நிலையில், கால்நடைகளை, விளைநிலம் அருகிலேயே கட்டி வைப்பது வழக்கம். இரவு, இப்பகுதியில், சுற்றித் திரியும் தெரு நாய்கள், கட்டி வைத்திருந்த இரண்டு கன்று குட்டிகளை வெறித்தனமாக கடித்துக் குதறின.தெரு நாய்கள் கூட்டமாக சேர்ந்து வேட்டையாடியதில் இரண்டு கன்று குட்டிகளும் இறந்தன. விரட்டி அடித்த என்னையும் துரத்த முயன்றன. தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை