உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஊர்வலம்

செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா ஊர்வலம்

அவிநாசி;அவிநாசி, கங்கவர் வீதியில் எழுந்தருளியுள்ள செல்லாண்டியம்மன் கோவில் கும்பாபிஷேகம், நாளை நடைபெறுவதை முன்னிட்டு, நுாற்றுக்கணக்கான பெண்கள் அம்மனுக்கு தீர்த்தக்குடம் எடுத்து ஊர்வலமாக சென்றனர்.கோவிலில், நேற்று ஸ்ரீ விக்னேஸ்வர பூஜை, கணபதி ஹோமம், நவக்கிரக ஹோமத்துடன் முதல் கால யாக சாலை பூஜை துவங்கியது. இன்று இரண்டாம் கால யாகசாலை மற்றும் மூன்றாம் கால யாகசாலை பூஜைகளில் அஷ்டபந்தன மருந்து சாத்துதல் உள்ளிட்ட ஹோம பூஜைகள் நடைபெறுகிறது.நாளை நான்காம் கால யாகசாலை வேள்வி பூஜைகள் மற்றும் மஹா கும்பாபிஷேகம் நடைபெறவுள்ளது. இதற்காக அம்மனுக்கு தீர்த்த குடம் எடுக்கும் நிகழ்ச்சியில், அவிநாசி லிங்கேஸ்வரர் கோவிலில் இருந்து நுாற்றுக்கணக்கான பெண்கள் உட்பட பக்தர்கள் பங்கேற்றனர். நான்கு ரத வீதிகள் வழியே சென்ற ஊர்வலம், கோவிலில் நிறைவடைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை