உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கொழுமத்தில் 1008 சங்காபிஷேக விழா

கொழுமத்தில் 1008 சங்காபிஷேக விழா

உடுமலை:மடத்துக்குளம் அருகே கொழுமம் குப்பம்பாளையம் உச்சிகாளியம்மன் கோவிலில், 1008 சங்காபிஷேக விழா நேற்று நடந்தது.மடத்துக்குளம் ஒன்றியம் கொழுமம் அருகேயுள்ள குப்பம்பாளையம் உச்சிகாளியம்மன் கோவிலில், 1008 சங்காபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி, நேற்றுமுன்தினம் இரவு 7.00 மணிக்கு அனுக்ஞை, விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், பஞ்சகவ்யம், 1008 சங்கு பூஜை நடந்தது. தொடர்ந்து நேற்று காலை 7.00 மணிக்கு விக்னேஸ்வர பூஜை, புண்யாகவாசனம், காலை 8.00 மணிக்கு 1008 சங்கு பூஜை, மூலமந்திர ஹோமமும், காலை 9.30 மணிக்கு அபிஷேகம், 1008 சங்காபிஷேகம், சிறப்பு அலங்கார பூஜை, மகா தீபாராதனை உள்ளிட்ட சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை