உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / விளைவுகள் முடியும் வினையாக!

விளைவுகள் முடியும் வினையாக!

நெகிழி கலந்தால் காற்று விஷமாகும்; மண் மலடாகும்; நீரோ கெடும்; நிலத்தையும், நீரையும் பண்படுத்த வேண்டிய காலத்தில், புண்படுத்திக்கொண்டு இருக்கிறோம் - மஞ்சப்பையைப் பயன்படுத்தச் சொன்னால் எங்கே பலரும் கேட்கிறோம்... நெகிழிப்பையைத் தானே வாஞ்சையோடு தாங்கிச் செல்கிறோம்... ஊர் ஊராக ஊர்வலங்கள் நடத்தி ஆணியடித்தாற்போல் சொன்னாலும் செவியில் மட்டும் போட்டுவிட்டு, மனதிற்குள் பதிக்காமல்தானே விடுகிறோம்? தனி மனிதர் ஒவ்வொருவரும் சபதம் எடுத்துக்கொண்டாலன்றி, நெகிழியின் சாம்ராஜ்ஜியத்தை ஒழிப்பது இனி சாத்தியமில்லை. முற்றிலுமாக இதை முடக்காவிட்டால், எதிர்காலச் சந்ததி நம்மைச் சபிப்பது நிச்சயம்.அவிநாசி, கைகாட்டிப்புதுார், பைபாஸ் சாலையில் உள்ள சாக்கடைக்கால்வாயை வளைத்துப்போட்டு 'குத்தகை'க்கு எடுத்திருக்கின்றன, நெகிழிக்கழிவுகள்; நெஞ்சம் பதறுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை