மேலும் செய்திகள்
மாற்றுத்திறனாளிக்கு கிராமத்தில் பாராட்டு விழா
13 minutes ago
குறைகேட்பு கூட்டம் 306 மனுக்கள் பதிவு
15 minutes ago
இன்று இனிதாக
17 minutes ago
உடுமலை: மடத்துக்குளம் ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்தது. திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் தேங்காய் மற்றும் கொப்பரை ஏலம் நடந்து வருகிறது. அதன்படி ஏலம் நடைபெற்றது. ஏலத்துக்கு, 2,204 தேங்காய்கள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. அதிகபட்சமாக கிலோ, 58 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக 52 ரூபாய்க்கும், சராசரியாக, 54 ரூபாய்க்கும் ஏலம் போனது. இதில், விவசாயிகள் 15 பேரும், வியாபாரிகள் 5 பேரும் கலந்து கொண்டனர். மேலும், 842 கிலோ எடையுள்ள 2,204 தேங்காய்கள் கொண்டு வரப்பட்டன. இதன் மதிப்பு, ரூ.45, 525 ஆகும். கொப்பரை இரண்டாம் தரம், அதிகபட்சமாக கிலோ 160 ரூபாய்க்கும், குறைந்தபட்சமாக ரூ.130, சராசரியாக ரூ.140க்கும் ஏலம் போனது.ஏலத்தில் 55.45 கிலோ எடையுள்ள 5 மூட்டை கொப்பரை கொண்டு வரப்பட்டன. இதன் மதிப்பு ரூ.8704. இதில், விவசாயிகள், வியாபாரிகள் தலா 5 பேர் பங்கேற்றனர்.
13 minutes ago
15 minutes ago
17 minutes ago