உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஹசாரே போராட்டத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு

ஹசாரே போராட்டத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு

உடுமலை : உடுமலையில், ஈஷா அமைப்பு சார்பில், அன்னா ஹசாரே போராட்டத்திற்கு மெழுகுவர்த்தி ஏந்தி ஆதரவு தெரிவித்தனர்.டில்லியில் கடந்த ஒன்பது நாளாக காந்தியவாதி அன்னா ஹசாரே வலிமையான 'ஜன் லோக்பால்' மசோதாவை நிறைவேற்ற வலியுறுத்தி, உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார். நாடு முழுவதும் பலரும் ஆதரவு தெரிவித்து பேரணி, உண்ணாவிரதத்திலும் ஈடுபட்டு வருகின்றனர். உடுமலை ஈஷா அமைப்பு சார்பில் நேற்று பஸ்ஸ்டாண்ட் எதிரே நேற்றுமுன்தினம் இரவு மெழுகுவர்த்தி ஏந்தி, காந்தியவாதி அன்னா ஹசாரேவுக்கு ஆதரவு தெரிவிக்கப்பட்டது. இதில், ஈஷா அமைப்பு தன்னார்வலர்கள், குழந்தைகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை