உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வழிப்பறியை தடுப்பதற்கு போலீஸ் கவனம் அவசியம்

வழிப்பறியை தடுப்பதற்கு போலீஸ் கவனம் அவசியம்

பல்லடம் : மாதப்பூர் பகுதியில் நடக்கும் வழிப்பறியை தடுக்க, போலீசார் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.பல்லடம் - காங்கயம் செல்லும் மெயின் ரோட்டில் முக்கிய ஊராக மாதப்பூர் உள்ளது. பல்லடம், திருப்பூர், கோவையில் இருந்து மாதப்பூர் மற்றும் பொங்கலூருக்கு நள்ளிரவில் கார் மற்றும் இரு சக்கர வாகனங் களில் செல்பவர்களை, மாதப்பூர் முத்துக்குமார சுவாமி பகுதியில் உள்ள இருட்டான பள்ளம், மாதப்பூர் ரோடு ஆகிய இடங்களில் மறைந்திருக்கும் மர்மக்கும்பல், கத்தியைக்காட்டி மிரட்டி, பணம் மற்றும் நகைகளை வழிப்பறி செய்து விட்டு, தப்பி ஓடுவதாக புகார் எழுந்துள்ளது. பணம், மோதிரம், வாட்ச்களை பறி கொடுக்கும் தொழிலதிபர்கள், தொழிலாளர்கள் பலர், தாங்கள் வழிப்பறி கும்பலிடம் பணம் மற்றும் பொருட்களை இழந்தது குறித்து பல்லடம் போலீசில் புகார் செய்வதில்லை. புகார் செய்தால், தங்களது 'இமேஜ்' பாதிக்கப்படும் என்று அச்சப்படுகின்றனர். சிலர், குறைவான தொகை தானே என 'அசால்ட்'டாக இருந்து விடுகின்றனர். இதன் காரணமாக, இந்த ரோட்டில் இரவில் செல்பவர்களை குறி வைத்து மறித்து, கொள்ளை அடிக்கும் மர்மக்கும்பல், அவ்வப்போது, தங்களது கைவரிசையை காட்டி வருகிறது. வெளியூரில் இருந்து வந்து கைவரிசை காட்டும் இக்கும்பலை கண்டுபிடிக்க, பல்லடம் போலீசார் மாதப்பூர் பகுதியில் இரவு ரோந்து பணியை தீவிரப்படுத்துவதுடன் பிற பகுதிகளை விட, கூடுதல் கவனம் செலுத்த முன்வர வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை