உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கம்

கிராமத்துக்கு அரசு பஸ் இயக்கம்

உடுமலை : செல்லப்பம்பாளையம் கிராமத்திலிருந்து திருப்பூருக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதால், கிராம மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். திருப்பூர் மாவட்டத்தின் கடைக்கோடி கிராமமாக செல்லப்பம்பாளையம் உள்ளது. திருப்பூர் மாவட்டம் உருவாக்கப்பட்ட போது, மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு எளிதாக சென்று வரும் வகையில் பஸ் இயக்க வேண்டும் என, கிராம மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, போக்குவரத்து கழக அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, திருப்பூருக்கு பஸ் இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. புதிய வழித்தடத்தில் இயக்கப்படும் பஸ், செல்லப்பம்பாளையத்திலிருந்து தேவனூர்புதூர் வழியாக உடுமலை வந்து திருப்பூருக்கு செல்லும். பஸ் இயக்க நிகழ்ச்சியில், அமைச்சர் சண்முகவேலு தலைமை வகித்தார். அ.தி.மு.க., உடுமலை ஒன்றிய செயலாளர் கந்தசாமி, அரசு வக்கீல் ராமகிருஷ்ணன், தேவனூர்புதூர், செல்லப்பம்பாளையம் அ.தி.மு.க., கிளை நிர்வாகிகள் மற்றும் போக்குவரத்து கழக அதிகாரிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை