உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநகராட்சியில் இட ஒதுக்கீடு விவரம் தெரியாமல் அரசியல் கட்சியினர் அவதி

மாநகராட்சியில் இட ஒதுக்கீடு விவரம் தெரியாமல் அரசியல் கட்சியினர் அவதி

திருப்பூர் : உள்ளாட்சி தேர்தல் நெருங்கி வருவதால், தேர்தலில் குதிக்க விரும்பும் அரசியல் கட்சியினர், அந்தந்த கட்சி அலுவல கங்களில் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். ஆண், பெண் இட ஒதுக்கீடு விவரங்கள், கட்சியினருக்கு தெளிவாக தெரியாததால், கணவன், மனைவி என இருவரும் விண்ணப்பித்து வருகின்றனர். அடுத்த மாதம் உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது. அதற்கான பணிகளை அரசியல் கட்சிகள் துவக்கி விட்டன. அ.தி.மு.க., - தே.மு.தி.க., - தி.மு.க., உள்ளிட்ட கட்சிகள், விருப்ப மனு பெறும் தேதியை அறிவித்து விட்டன. திருப்பூர் மாநகராட்சி மேயர் பதவியை பிடிக்கவும், மண்டல தலைவர் பதவிகளை பெறவும், கவுன்சிலராகவும் பலரும் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். அதிகாரிகள் தரப்பிலும், வார்டு வாரியாக வாக்காளர் பட்டியல், ஓட்டுச் சாவடிகள் தயார் செய்யும் பணி வேகமெடுத்துள்ளது. திருப்பூர் மாநகராட்சி, இரண்டு நகராட்சிகள் மற்றும் எட்டு ஊராட்சிகளை ஒன்றிணைத்து, 60 வார்டுகளுடன் உருவாக்கப்படுகிறது. வார்டு எல்லை மறுசீரமைப்பில், நகராட்சி, ஊராட்சி பகுதியினர் எவ்வித ஆட்சேபனையும் தெரிவிக்கவில்லை. மாநக ராட்சி பகுதியில் ஆட்சேபனை தெரிவிக்கப்பட்டதால், மீண்டும் எல்லைகள் மறுசீரமைப்பு செய்யப்பட்டு அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அடுத்ததாக, மண்டலம் பிரிப்பு பணிகளும், ஓட்டுச்சாவடி, வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணிகளும் நடந்து வருகின்றன. இருப்பினும், மொத்தம் உள்ள 60 வார்டுகளுக்கான இட ஒதுக்கீடு விவரங்கள் வெளியிடப்படாமல் உள்ளன. ஒவ்வொரு கட்சியிலும், குறிப்பாக ஆளும் கட்சி வட் டாரத்திலும், தங்களது ஆதரவாளர்களை நிறுத்த வசதியாகவும், எதிர்கோஷ்டியி னரை வலுவிழக்கச் செய்யும் வகையிலும், ஆண், பெண் இட ஒதுக்கீடு கருவியாக பயன்படுத்தப்படுகிறது. குறிப்பாக, திருப் பூர் தெற்கு ஊராட்சி மற்றும் நல்லூர் நகராட்சி பகுதிகளில் அமையும் வார்டுகள், பெரும்பாலும் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக, கட்சியின் முன்னணி நிர்வாகிகள் கவலை அடைந்துள்ளனர். இட ஒதுக்கீடு குறித்து தெளிவான அறிவிப்பு கட்சியினருக்கு கிடைக்காததால், கணவன், மனைவி என இருவர் பெயரிலும் விருப்ப மனு தாக்கல் செய்து வருகின்றனர். மற்றொருபுரம், மாநகராட்சியை பெறுவதற்காக, கூட்டணி கட்சியினரும் மேல்மட்ட அளவில் ரகசிய ஆலோசனை நடத்தி வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை