உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பெட்ரோல் விலை உயர்வு கொ.மு.க., கண்டனம்

பெட்ரோல் விலை உயர்வு கொ.மு.க., கண்டனம்

திருப்பூர் : 'பெட்ரோல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும்,' என, கொ.மு.க., தலைவர் பெஸ்ட் ராமசாமி தெரிவித்துள்ளார்.அவர் வெளியிட்டுள்ள அறிக்கை:பெட்ரோல் விலை மீண்டும் உயர்த்தப்பட்டுள்ளதால் மக்கள் மீது நிதிச்சுமை ஏறியுள்ளது. கடந்த நான்கு மாதங்களில் மட்டும் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு; வேலையின்மை போன்ற பல்வேறு பிரச்னைகளில் பொதுமக்கள் பாதித்துள்ள நிலையில், இவ்விலை ஏற்றம் பொதுமக்களை கடுமையாக பாதிக்கும். மேலும், காய்கறி, மளிகை பொருட்களின் விலை ஏறும். சாமான்ய மக்களை கடுமையாக பாதிக்கும், இவ்விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும். திருப்பூர், பல்லடம், சோமனூர் பகுதிகளில் உள்ள விசைத்தறியாளர்கள் 20 நாட்களாக வேலை நிறுத்த போராட்டம் மேற்கொண்டு வருகின்றனர். பேச்சு தொடர்ந்து தோல்வியில் முடிந்து வருகிறது; ஜவுளித்தொழிலில் ஈடுபட்டுள்ள அனைவரும் கடுமையாக பாதித்துள்ளனர். தீபாவளி நெருங்கி வரும் நிலையில், பண்டிகை ஆர்டர்களை முடிக்க முடியாமல் உள்ளனர். விவசாயம் பாதித்துள்ள நிலையில், ஜவுளி தொழிலும் முடங்கும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு உடனடியாக தலையிட்டு பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும், என்று தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ