உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர் : 'ரயில்வே ஸ்டேஷனில் பிளாட்பாரங்களில் டீ, காபி, தின்பண்டங்கள் விற்பதை தடை செய்யக் கூடாது,' என்பதை வலியுறுத்தி, திருப்பூரில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ரயில்வே பிளாட்பாரங்களில் டீ, காபி விற்பதை தடை செய்ய வேண்டும்; தின்பண்டங்கள் விற்பனை செய்பவர்களை அனுமதிக்கக் கூடாது என தடை செய்வதை கண்டித்து, ரயில்வே கான்ட்ராக்ட் லேபர் யூனியன் (ஆர்.சி.எல்.யு.,) மற்றும் சி.ஐ.டி.யு., டி.ஆர்.இ.யு., சங்கங்கள் சார்பில் திருப்பூர் ரயில்வே ஸ்டேஷன் வளாகத்தில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்.சி.எல்.யு., சங்கத்தின் திருப்பூர் கிளை துணை தலைவர் ராஜூ தலைமை வகித்தார்; கிளை செயலாளர் சுப்ரமணியம் முன்னிலை வகித்தார். ஆர்.சி. எல்.யு., சேலம் கோட்ட தலைவர் ராமகிருஷ்ணன், சி.ஐ.டி.யு., மாவட்ட செயலாளர் சந்திரன், டி.ஆர். இ.யு., மண்டல துணை தலைவர் சாம்பசிவம் உள்ளிட்டோர் கோரிக்கையை வலியுறுத்தி பேசினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ