உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / குடிமங்கலம் ஒன்றியத்தில் 22 பேர் மனு தாக்கல்

குடிமங்கலம் ஒன்றியத்தில் 22 பேர் மனு தாக்கல்

உடுமலை : குடிமங்கலம் ஒன்றியத்தில், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு நேற்று 22 வேட்பு மனுக்கள் பெறப்பட்டது. குடிமங்கலம் ஒன்றியத்தில், ஒரு மாவட்ட ஊராட்சி வார்டு, 13 ஒன்றிய குழு வார்டு, 23 ஊராட்சி தலைவர், 201 வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு வேட்பு மனுத்தாக்கல் பெறப்பட்டு வருகிறது. நேற்று ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு மட்டும் 22 மனுக்கள் பெறப்பட்டன. ஆமந்தகடவு 8 வது வார்டுக்கு ஒரு மனுவும், குடிமங்கலம் 1 வது வார்டு-3, 5 வது வார்டு-1, கோட்டமங்கலம் 1 வது வார்டு-2, 4 வது வார்டு 2, 7 வது வார்டு 1, பொன்னேரி 2 வது வார்டு-1, 8 வது வார்டு-2, பண்ணைக்கிணறு 1 வது வார்டு-1, 5 வது வார்டு-1, விருகல்பட்டி 2 வது வார்டு-1, 3 வது வார்டு-2, 4 வது வார்டு-2, 6 வது வார்டு-1, 7 வது வார்டுக்கு 1 மனுவும் பெறப்பட்டது. ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுபவர்கள் வேட்பு மனுத்தாக்கல் துவங்கிய நாளில் இருந்தே மனுத்தாக்கல் செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஒன்றியத்தில் மாவட்ட ஊராட்சி, ஒன்றிய குழு வார்டு ஆகிய பதவியிடங்களுக்கு அரசியல் கட்சிகள் சார்பில் வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படவில்லை. இதனால், இந்த பதவிகளுக்கு இதுவரை வேட்பு மனுக்கள் எதுவும் பெறப்படவில்லை. வேட்பு மனுத்தாக்கல் செய்த வார்டு உறுப்பினருக்கான வேட்பாளர்கள் கிராமங்களில் பிரசாரத்தை துவக்கியுள்ளனர். இதனால், தேர்தல் பரபரப்பு தீவிரமடைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி