| ADDED : செப் 23, 2011 09:59 PM
வால்பாறை : வால்பாறை நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க.,வேட்பாளராக
செல்வி விஜயராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். வால்பாறை நகராட்சி தலைவர் பதவி
இந்த முறை பெண்கள்(எஸ்.சி.,) க்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இப்பதவிக்கு சீட்
கேட்டு அ.தி.மு.க,, தி.மு.க.,வை சேர்ந்தவர்கள் விருப்ப மனு செய்துள்ளனர்.
இந்நிலையில் நகராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க. வேட்பாளராக
செல்விவிஜயராஜன் அறிவிக்கப்பட்டுள்ளார். பயோ-டேட்டா: பெயர்:
வி.செல்விவிஜயராஜன் படிப்பு: 9ம் வகுப்பு வயது: 52. ஜாதி: எஸ்.சி. தொழில்:
கட்சிப்பணி. கட்சிப்பணி: 1974 ம் ஆண்டு முதல் மகளிர் அணி ஒன்றிய
அமைப்பாளராக இருந்தவர். கடந்த 2001 ல் நடந்த உள்ளாட்சி தேர்தலில் தலைவர்
பதவிக்கு போட்டியிட்டு வெற்றி பெற்றார். தற்போதைய பதவி: அ.தி.மு.க.,நகர
மகளிர் அணி தலைவி.தி.மு.க., வேட்பாளர்வால்பாறை நகராட்சித்தலைவர் பதவிக்கு
தி.மு.க.வில் சத்தியவாணிமுத்து வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். வால்பாறை
நகராட்சித்தலைவர் பதவிக்கு தி.மு.க.,வில் முன்னாள் எம்.எல்.ஏ.,மனைவி
கண்ணகி, முன்னாள் பேரூராட்சித்தலைவர் ஜானகிராமர், தி.மு.க.,ஒன்றிய துணை
செயலாளர் சத்தியவாணிமுத்து ஆகியோர் விருப்ப மனு செய்திருந்தனர்.
இந்நிலையில் நகராட்சித்தலைவர் பதவிக்கு தி.மு.க.,வேட்பாளராக
சத்தியவாணிமுத்து அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்பாளர் பயோ-டேட்டா: பெயர்:
சத்தியவாணிமுத்து. படிப்பு: 5ம் வகுப்பு. வயது: 49. ஜாதி: எஸ்.சி. தொழில்:
தொழிலாளி. கட்சிப்பணி: தி.மு.க.,ஒன்றிய துணை செயலாளராக தொடர்ந்து 3 முறை
இருந்துள்ளார். கட்சியின் ஒன்றிய மகளிர் அணி செயலாளராகவும் உள்ளார். இவரது
கணவர் வேலுச்சாமி கவுன்சிலராக உள்ளார்.