உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  பட்டுக்கூடுக்கு நல்ல விலை விவசாயிகள் மகிழ்ச்சி

 பட்டுக்கூடுக்கு நல்ல விலை விவசாயிகள் மகிழ்ச்சி

உடுமலை: தமிழகத்தில், மத்திய மற்றும் மேற்கு மாவட்டங்களில், கணிசமான விவசாயிகள் பட்டுப்புழு வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இதில், உடுமலை பகுதி முன்னிலை வகிக்கிறது. கடந்த நான்கு, ஐந்து மாதங்களாக பட்டுக்கூடுகளுக்கு நல்ல விலை கிடைக்கிறது. வழக்கமாக பருவ மழைக்காலத்தில், மல்பெரி செடி வளர்ச்சி நன்றாக இருக்கும். இதனால், விவசாயிகள் அதிகளவில் பட்டுப்புழுக்களை வளர்த்து, கூடுதலாக பட்டுக்கூடு உற்பத்தி செய்வர். வரத்து அதிகரிப்பு காரணமாக விலை சரிவு ஏற்படுவது வழக்கம். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக பட்டுக்கூடுகளுக்கு கிராக்கி நிலவுகிறது. ஒரு கிலோ பட்டுக்கூடு, 700 -- 900 ரூபாய் வரை விலை போகிறது. மல்பெரி நடவும் அதிகரித்துள்ளது. பட்டு புழு வளர்ப்பில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு, நல்ல லாபம் கிடைக்கிறது. நடப்பாண்டு பட்டு விவசாயிகளுக்கு மகிழ்ச்சியான ஆண்டாக அமைந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை