உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு

 தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு; விவசாயிகளுக்கு அழைப்பு

உடுமலை: ராபி பருவத்தில் சாகுபடி செய்யப்படும், வெங்காயம், வாழை, மரவள்ளி, தக்காளி, கொத்தமல்லி, சிவப்பு மிளகாய் ஆகிய தோட்டக்கலை பயிர்களுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம், என அதிகாரிகள் தெரிவித்தனர். வெங்காயம் பயிருக்கு, வரும் 2026 பிப்., 28 க்குள், ஏக்கருக்கு, ரூ.648.50 செலுத்தி, பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம். அதே போல், மரவள்ளி பயிருக்கு ஏக்கருக்கு, ரூ.1,985 செலுத்தி வரும், 2026 பிப்., 28க்குள் பயிர்க்காப்பீடு செய்ய வேண்டும். தக்காளி பயிருக்கு, ஏக்கருக்கு, ரூ.1,582.50 காப்பீடு தொகையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது; வரும், 2026 ஜன., 31 கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது. கொத்தமல்லி பயிருக்கு, ஏக்கருக்கு, ரூ.636 காப்பீடு தொகையாக, வரும், 2026 ஜன., 2ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். சிவப்பு மிளகாய் பயிருக்கு, ஏக்கருக்கு, ரூ.1372.50 செலுத்தி, வரும், ஜன., 31க்குள் காப்பீடு செய்து கொள்ளலாம். வாழைக்கு, ஏக்கருக்கு, ரூ.2,548.70 காப்பீடு தொகையாக, வரும் 2026 பிப்., 28ம் தேதிக்குள் செலுத்த வேண்டும். பயிர் காப்பீடு செய்ய விருப்பமுள்ள விவசாயிகள், முன்மொழிவு படிவம், விண்ணப்ப படிவம், அடங்கல், டிஜிட்டல் பயிர் சான்றிதழ், ஆதார் நகல், வங்கிக்கணக்கு புத்தகத்தில் நகல் ஆகிய ஆவணங்களுடன், இ- சேவை மையங்கள், தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்கள் மற்றும் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் வாயிலாக, விவசாயிகள் பயிர்க்காப்பீடு செய்து கொள்ளலாம், என, அதிகாரிகள் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி