உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  அரசாணி விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை

 அரசாணி விலை வீழ்ச்சி; விவசாயிகள் கவலை

பொங்கலுார்: ஆடிப்பட்டத்தில் கணிசமான விவசாயிகள் அரசாணி சாகுபடி செய்திருந்தனர். மழைக்காலம் என்பதால் அரசாணி செடிகளின் வளர்ச்சி அபரிமிதமாக இருந்தது. அறுவடை துவங்கி உள்ளது. தேவையை விட உற்பத்தி அதிகரித்ததால் விலை சரிந்துள்ளது. கிலோ மூன்று முதல் ஐந்து ரூபாய் வரையே வியாபாரிகள் கொள்முதல் செய்கின்றனர். விவசாயிகள் பலத்த நஷ்டத்தை சந்தித்துள்ளனர். வரும் மார்கழி, தை மாதங்களில் பண்டிகைகள் வரவுள்ளது. அனைத்து வீடுகளிலும் அரசாணி பயன்படுத்துவர். அப்போது தேவை அதிகரித்து விலை சற்று உயர வாய்ப்பு உள்ளது. விவசாயிகள் சிலர் விலை உயர்வை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி