உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

கோட்டை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்

திருப்பூர்;ஓம் சக்தி கோஷத்துடன், கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, நேற்று கோலாகலமாக நடைபெற்றது.திருப்பூர் - தாராபுரம் ரோட்டில் உள்ள கோட்டை ஸ்ரீ மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா, கடந்த 18ம் தேதி, கணபதி ஹோமத்துடன் துவங்கி நடைபெற்று வந்தது. 19ம் தேதி, நவகிரக ஹோமம், யாகசாலை பிரவேசம், முதல்கால யாகசாலை பூஜைகள் நடைபெற்றன.நேற்று அதிகாலை 4:00 மணிக்கு, நான்காம் கால யாகபூஜையுடன் விழா துவங்கியது. காலை, 5:00 மணிக்கு பரிவாரமூர்த்திகளுக்கு கும்பாபிஷேகம் செய்விக்கப்பட்டு, தீபாராதனை நடைபெற்றது. காலை, 9:15 மணி அளவில், கோட்டை ஸ்ரீ மாரியம்மன் ராஜகோபுரம், மூலாலய கோபுரம், நுழைவு கோபுரம் மற்றும் கோட்டை மாரியம்மனுக்கு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அலைகடல்போல் திரண்டிருந்த பக்தர்கள், 'ஓம் சக்தி... பராசக்தி...' என கோஷங்கள் எழுப்பி, பரவசமாகினர்.கூனம்பட்டி ஸ்ரீகுருகுல வேதாகம பாடசாலை முதல்வர் ஸ்ரீநடராஜ சுவாமி தலைமையில், சிவாச்சார்யார்கள் கும்பாபிஷேகம் செய்வித்தனர். திரளான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை வழிபட்டனர்.விழாவையொட்டி பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. மதியம், 12:00 மணிக்கு திருக்கல்யாணத்தை தொடர்ந்து, இரவு, 7:00 மணிக்கு அம்பாள் திருவீதியுலாவந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை