உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பைக்கு தீவைப்பு

 டிரான்ஸ்பார்மர் அருகில் குப்பைக்கு தீவைப்பு

திருப்பூர்: திருப்பூரில் குப்பை பிரச்னை தீர்வு காணப்படாமல் உள்ளது. பிளாஸ்டிக் உட்பட மக்காத குப்பைகள் எரிக்கப்படுவதால், அதிலிருந்து வெளியேறும் புகை, மக்களுக்கு மூச்சுத்திணறல் போன்ற உடல் உபாதைகள் மற்றும் சுற்றுச்சூழல் சீர்கேடு ஏற்படுகிறது. இந்நிலை பல இடங்களில் தொடர்கிறது. குப்பைக்கு தீ வைக்கும் செயல் ஒரு படி மேலே சென்று, நேற்று முன்தினம் இரவு பூ மார்க்கெட், குலாலர் திருமண மண்டபம் அருகில் டிரான்ஸ்பார்மருக்கு அருகில், குப்பைக்கு தீ வைத்தனர். தகவல் அறிந்து வந்த தீயணைப்பு துறையினர், விரைந்து தீயை அணைத்தனர். அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. இதுபோன்ற செயல்கள் தவிர்க்கும் படி, குப்பைக்கு விரைவில் தீர்வு வர வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை