மேலும் செய்திகள்
ஆயக்கட்டில் நெல் நாற்றங்கால்; நீர்மட்டம் திருப்தியால் பணி
22 hour(s) ago
மகளிர் கபடி; திருச்சி அணி வெற்றி
23 hour(s) ago
திறந்தவெளி கழிவுநீர் கால்வாய் விபத்துக்கு முன் மூடப்படுமா?
23 hour(s) ago
திருப்பூர்: மாவட்ட தேர்தல் பிரிவு, பள்ளி கல்வித்துறை சார்பில், ஜெய்வாபாய் மாநகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாதிரி தேர்தல், ஓட்டுச்சாவடி மையம் மற்றும் ஓட்டுச்சாவடி அமைக்கப்பட்டு தேர்தல் குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. தலைமை ஆசிரியர் ஸ்டெல்லா அமலோற்பவ மேரி வரவேற்றார். முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் முன்னிலை வகித்தார். கலெக்டர் மனிஷ்நாரணவரே பேசினார். முதன்மை கல்வி அலுவலர் புனித அந்தோணியம்மாள் கூறுகையில், ''ஒவ்வொரு பெற்றோரும் தவறாமல் எஸ்.ஐ.ஆர். விண்ணப்பத்தை முழுமையாக பூர்த்தி செய்து வழங்க மாணவியர் வழிகாட்ட வேண்டும்,'' என்றார். முன்னதாக, பள்ளியில் அமைக்கப்பட்டிருந்த மாதிரி ஓட்டுச்சாவடி, ஓட்டுச்சாவடி மையம், ஓட்டு எண்ணும் மையம், விவி பேட், பேலட் மெஷின் செயல்பாடு, ஓட்டுப்பதிவுக்கு முன்னும், பின்னும் பின்பற்றப்படும் வழிமுறை, ஓட்டு எண்ணும் நடைமுறை குறித்து அரங்கை கலெக்டர் உள்ளிட்ட அலுவலர்கள் பார்வையிட்டனர். 'ஒவ்வொரு ஓட்டின் உரிமையை நிலைநாட்ட வேண்டும்; நமக்கான வாய்ப்பு, நமது ஓட்டு; ஓட்டளிக்கவும், ஜனநாயக கடமையாற்றவும் மறக்க கூடாது; தவறக்கூடாது' என்பது உள்ளிட்ட விழிப்புணர்வு வாசகங்களை பாதகைகளுடன் மாணவியர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.
22 hour(s) ago
23 hour(s) ago
23 hour(s) ago