உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கைதானவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

கைதானவர் மீது பாய்ந்தது குண்டாஸ்

திருப்பூர்:கொலை வழக்கு தொடர்பாக கைதான நபர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டது.திருமுருகன்பூண்டி போலீஸ் எல்லையில், கடந்த ஜன. 2ம் தேதி, சேகர் என்பவர் கொலை செய்யப்பட்டார். இதில் ஈடுபட்ட சவுகத் அலியை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.இவ்வழக்கில், நெருப்பெரிச்சலை சேர்ந்த சவுகத் அலி, 26 தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட நபர் என்பதால் அவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நடவடிக்கை எடுத்து மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபிநபு உத்தரவிட்டார்.இந்த உத்தரவு நகல் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள சவுகத் அலியிடம் வழங்கப்பட்டது.கடந்த இரு மாதத்தில், திருப்பூர் மாநகர போலீஸ் எல்லையில் மொத்தம் எட்டு பேர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தில் நட வடிக்கை எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை