உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / வீதியின் பெயரை அழித்த தி.மு.க., ஹிந்து முன்னணி கண்டனம்

வீதியின் பெயரை அழித்த தி.மு.க., ஹிந்து முன்னணி கண்டனம்

திருப்பூர்:'ஜாதி பெயர் என்று கூறி மாநகராட்சியால் வைக்கப்பட்டுள்ள வீதி பலகையில் இருந்த பெயரை அழித்த தி.மு.க., பிரமுகர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' என ஹிந்து முன்னணி தெரிவித்துள்ளது.அதன் மாநில தலைவர் காடேஸ்வரா சுப்ரமணியம் அறிக்கை:கோவை, ரேஸ்கோர்ஸ் பகுதியில் ஜி.டி., நாயுடு என்ற வழிகாட்டும் பெயர் பலகை அமைந்துள்ளது. இதனை அப்பகுதியை சேர்ந்த தி.மு.க., பிரமுகர் ரகுநாதன், ஜி.டி. நாயுடு என்ற பெயர் பலகையில், நாயுடு என்ற வார்த்தையை மை பூசி அழித்தார்.இந்திய பொருளாதார வளர்சசிக்கு வித்திட்ட கொங்கு மண்டலத்துக்கு பெருமை சேர்த்தவர் விஞ்ஞானி ஜி.டி., நாயுடு. அவருடைய பெருமையை அழிக்கும் வகையில் செயல்பட்டுள்ள ரகுநாதன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை மாநகராட்சி நிர்வாகத்தால் வைக்கப்பட்ட பெயர் பலகையை அழிப்பதற்கு இவருக்கு என்ன உரிமை உள்ளது. வேடிக்கை பார்க்கிறதா காவல்துறை?அவர் மீது வழக்குப்பதிவு செய்திருந்தாலும் கூட மொழி ரீதியாக, இன ரீதியாக ஜாதி ரீதியாக மக்களை பிளவுபடுத்தி சமூக பதற்றத்தை துாண்ட நினைத்த அவர் மீது கடும் நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இவர் ஒரு போலி விளம்பரவாதி. இரு ஆண்டுகளுக்கு முன் அ.தி.மு.க.,வில் இருந்தவர், தி.மு.க.,வில் ஐக்கியமாகி, தேவையில்லாத சர்ச்சைகளை கிளப்புகிறார்.ஜாதி, மொழி துவேசத்தை துாண்டும், இவரை போன்ற நபர்கள் மீது தமிழக அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கும் இவரை போன்ற நபர்களை கட்சியில் இருந்து நீக்கி அவர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை