உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அரசு சுகாதார நிலையங்களில் ரத்த வங்கி செயல்படுத்துங்க

அரசு சுகாதார நிலையங்களில் ரத்த வங்கி செயல்படுத்துங்க

உடுமலை;மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேர்ந்தெடுத்து, ரத்த வங்கியை செயல்படுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.திருப்பூர் மாவட்டத்தில், வாகன விபத்து உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் பாதிக்கப்படுவது அதிகரிக்கிறது. அதேசமயம், அவசர சிகிச்சையின்போது, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய நேரத்தில் ரத்தம் ஏற்ற முடியாத காரணத்தால், உயிரிழப்பும் ஏற்படுகிறது.இதற்கு, மாவட்டத்தில், அரசு மருத்துவனைகளைத்தவிர, வேறெங்கும் ரத்த வங்கி இல்லாததே காரணமாகும்.கிராமங்களில் ஏற்படும் விபத்து சம்பவங்களில், உயிருக்கு ஆபத்தான நிலையில், அருகில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கே, முதலில் சிகிச்சை பெற கொண்டு செல்கின்றனர்.ஆனால் ரத்தப்போக்கு மற்றும் அவசர சிகிச்சைக்கு தேவையான, ரத்த இருப்பு இல்லாததால், நகரங்களில் உள்ள மருத்துவமனைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர். இதனால், நோயாளிகள் பெரிதும் பாதிக்கின்றனர்.எனவே, மாவட்டத்தில், மேம்படுத்தப்பட்ட அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களை தேர்ந்தெடுத்து, ரத்த வங்கி செயல்பட சுகாதாரத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென, வலியுறுத்தப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ