உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  ஜெ. நினைவுநாள்;   அ.தி.மு.க.வினர் மலரஞ்சலி

 ஜெ. நினைவுநாள்;   அ.தி.மு.க.வினர் மலரஞ்சலி

திருப்பூர்: திருப்பூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க., சார்பில், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, 9வது நினைவு தினம் நேற்று அனுஷ்டிக்கப்பட்டது. குமரன் நினைவகம் அருகே நடந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட அவைத்தலைவர் பழனிசாமி தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., விஜயகுமார் முன்னிலை வகித்தார். பகுதி செயலாளர்கள் அன்பகம் திருப்பதி, கண்ணப்பன், தினேஷ், எம்.ஜி.ஆர்., மன்ற மாவட்ட செயலாளர் பழனிசாமி உள்ளிட்டோர், மலர் துாவி மரியாதை செய்தனர். l புதிய பஸ் ஸ்டாண்ட் பகுதியில் ஜெ. படத்துக்கு எம்.எல்.ஏ. விஜயகுமார் மாலை அணிவித்து, மலர் துாவி மரியாதை செலுத்தினார். சிறுபூலுவபட்டி, செவந்தாம்பாளையம், தென்னம்பாளையம் பகுதி களிலும் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. l முன்னாள் முதல்வர் பன்னீர்செல்வத்தின், அ.தி.மு.க. உரிமை மீட்பு அணி சார்பில், வீரபாண்டி எம்.ஜி.ஆர்., திடலில், ஜெ., நினைவு நாள் நிகழ்ச்சி நடந்தது. ஜெ., படத்துக்கு, மாவட்ட செயலாளர் சண்முகம் தலைமையிலான நிர்வாகிகள் மலர் துாவி மரியாதை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி