| ADDED : ஜன 21, 2024 01:59 AM
திருப்பூர்;அயோத்தி ஸ்ரீ ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, திருப்பூர் நகரில், 15 இடங்களில் நேரலையை பார்க்கும் வகையில் ஹிந்து முன்னணியினர் ஏற்பாடு செய்துள்ளனர்.உலகமே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கும் அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேகம் மிகவும் பிரம்மாண்டமாகநாளை (22ம் தேதி) நடக்கிறது. இதற்காக, ஒவ்வொரு மாநிலங்களில், கும்பாபிஷேகம் தொடர்பாக பொதுமக்களுக்கு ஹிந்து அமைப்புகள் அழைப்பு விடுத்தனர்.நாளை நடக்கும் கும்பாபிஷேகத்தை மக்கள் பார்க்கும் வகையில், ஹிந்து முன்னணி திருப்பூர் மாநகர் மாவட்டம் சார்பில், 15 இடங்களில் எல்.இ.டி., பெரிய திரை மூலம் காண மும்முரமாக ஏற்பாடு செய்து வருகின்றனர். அதன், ஒரு பகுதியாக, திருப்பூர் தாராபுரம் ரோடு சந்திராபுரம் பிரிவு, காடேஸ்வரா காம்ப்ளக்ஸில் இதற்கான பிரத்யேக ஏற்பாடுகள் நடக்கிறது. காலை, 10:30 மணி முதல் பஜன், திவ்யப்பிபரபந்தம், சிறப்பு பூஜை, ஆராதனை மற்றும் மதியம், 12:00 மணி முதல் நேரலை துவங்குகிறது. தொடர்ந்து, அன்னதானம் வழங்க உள்ளனர்.