உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / கழிப்பிடத்துக்கு பூட்டு

கழிப்பிடத்துக்கு பூட்டு

பல்லடம்;பல்லடம் தாலுகா அலுவலகத்தில், கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது. கடந்த சில தினங்களாக, கழிப்பிடத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது.இது குறித்து பொதுமக்கள் கூறுகையில், 'தாலுகா அலுவலக வளாகத்தில் உள்ள கழிப்பிடம், போதிய பராமரிப்பு இல்லை. சமீப நாட்களாக, கழிப்பிடத்துக்கு பூட்டு போடப்பட்டுள்ளது. வெளியில் உள்ள மற்றொரு கழிப்பிடமும் பராமரிப்பு இன்றி துர்நாற்றம் வீசியபடி காணப்படுகிறது. இதனால், தாலுகா அலுவலகம் வரும் தாய்மார்கள், பெண்கள் மற்றும் வயதானவர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர். கழிப்பறையை பராமரித்து, பொதுமக்களின் பயன்பாட்டுக்கு கொண்டு வர வேண்டும்'' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி