உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / நகை, பணம், வாகனங்கள் திருடியவர் கைது

நகை, பணம், வாகனங்கள் திருடியவர் கைது

திருப்பூர்;திருப்பூர், பொங்கலுார் - கண்டியன்கோவிலை சேர்ந்தவர் வடிவேலன், 40. கடந்த 4ம் தேதி இவரது வீட்டின் பூட்டை உடைத்து, 10 சவரன் நகை, 60 ஆயிரம் ரூபாய், டூவீலர் ஆகியவற்றை மர்ம ஆசாமிகள் திருடி சென்றனர். அவிநாசிபாளையம் போலீசார் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். நேற்று காலை சந்தேகப்படும் விதமான நபரை பிடித்து விசாரித்தனர்.விசாரணையில், தர்மபுரி, முள்ளுவாடியை சேர்ந்த மணிமாது, 55 என்பது தெரிந்தது. இவர் வடிவேலன் வீட்டில் நகை, பணம் டூவீலர் ஆகியவற்றை திருடியதும், கடந்த 30ம் தேதி, காமநாயக்கன்பாளையத்தில் டூவீலர் ஒன்று மற்றும் தொட்டிபாளையத்தில் டூவீலர் என, இரண்டு வாகனங்களையும் திருடியதும் தெரிந்தது. வீடுகளை நோட்டமிட்டு கைவரிசை காட்டியது தெரிந்தது. அவரை கைது செய்த போலீசார், மூன்று டூவீலர், பத்து சவரன் நகை, 60 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்தனர்.

இருவர் கைது

திருப்பூர் வடக்கு போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பார்க் ரோட்டில் நிற்கும் வாகனங்களை திருடுவது, அவ்வழியாக வரும் வாகன ஓட்டிகளிடம் மொபைல் போன்களை பறிப்பது போன்ற குற்றங்களில் இருவர் ஈடுபட்டு வருவது குறித்து போலீசாருக்கு தெரிந்தது. அப்பகுதியில் உள்ள 'சிசிடிவி' பதிவுகளை கைப்பற்றி விசாரித்தனர். அதில், முத்தணம்பாளையத்தை சேர்ந்த அறிவழகன், 22, சிட்கோவை சேர்ந்த சூர்யா, 23 என, இருவரை கைது செய்து, டூவீலரை பறி முதல் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி