உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு குழுவுடன் பேச்சுவார்த்தை

 சுங்கச்சாவடிக்கு எதிர்ப்பு குழுவுடன் பேச்சுவார்த்தை

பொங்கலுார்: கோவை - திருச்சி ரோடு பொங்கலுாரில் டோல்கேட் உள்ளது. விதிமுறை மீறி இது அமைக்கப்பட்டதாக கூறி அப்பகுதியைச் சேர்ந்த பொது மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். நேற்றுமுன்தினம் அவிநாசிபாளையம் போலீஸ் ஸ்டேஷனில் பேச்சுவார்த்தை நடந்தது. பேச்சு வார்த்தையில் பொங்கலூரில் உள்ள ஆட்டோ, கார் உள்ளிட்ட வாகனங்களுக்கு கட்டணம் இல்லாமல் அனுமதிப்பது தொடர்பாக உடன்பாடு ஏற்பட்டது. மேலும் அருகில் உள்ள ஊராட்சிகளுக்கு, 340 ரூபாய் மாத கட்டணத்தில் சுங்கச்சாவடியை பயன்படுத்தவும் முடிவு செய்யப்பட்டது. இதில் கொ.ம.தே.க., மாவட்ட செயலாளர் ராஜேந்திரன், நகாய் அலுவலர் செந்தில்குமார், பொங்கலுார் வியாபாரிகள் சங்கத் தலைவர் விஸ்வநாதன், சுங்கச்சாவடி எதிர்ப்பு குழு ஒருங்கிணைப்பாளர் சிவகுமார் மற்றும் இன்ஸ்பெக்டர் வினோத்குமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை