உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இனிக்காது இழுத்தடிப்பு!: ஜி.எஸ்.டி., ரீபண்ட் தாமதம் : ஏற்றுமதியாளர்கள் தவிப்பு

இனிக்காது இழுத்தடிப்பு!: ஜி.எஸ்.டி., ரீபண்ட் தாமதம் : ஏற்றுமதியாளர்கள் தவிப்பு

திருப்பூர்;ஜி.எஸ்.டி., திரும்ப பெறுவதில் காலதாமதம் தவிர்க்க கோரி, வணிக வரி கூடுதல் கமிஷனரிடம், திருப்பூர் வரி பயிற்சியாளர் கூட்டமைப்பினர் மனு அளித்தனர்.திருப்பூர் வருவாய் மாவட்ட பகுதிகளை உள்ளடக்கிய மூன்று வணிக வரி மாவட்டங்களுடன், திருப்பூர் வணிக வரி கோட்டம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. அவிநாசி அருகில் உள்ள கைகாட்டியில் அமலாக்க பிரிவுடன் கூடிய வணிக வரி இணை கமிஷனர் அலுவலகம் மற்றும் வணிக வரி மாவட்டம் 3க்கான துணை கமிஷனர் அலுவலகங்கள் இயங்குகின்றன.குமார் நகரில் வணிக வரி மாவட்டம் 2க்கான துணை கமிஷனர் அலுவலகமும்; குமரன் ரோட்டில், வணிக வரி மாவட்டம் 1க்கான துணை கமிஷனர் அலுவலகமும் செயல்படுகின்றன. புதிய வணிக வரி கோட்டம் முழுவீச்சில் செயல்பாட்டை துவக்கியுள்ளது.வணிக வரித்துறை கூடுதல் கமிஷனர் நாராயணன், நேற்றுமுன்தினமும், நேற்றும் திருப்பூரில் முகாமிட்டு, திருப்பூர் வணிக வரி கோட்ட செயல்பாடுகள் குறித்து ஆய்வு நடத்தினார்.நேற்று மாலை, திருப்பூர் குமரன் ரோட்டிலுள்ள வணிக வரித்துறை மாவட்டம் 1க்கான துணை கமிஷனர் அலுவலகத்தில், கூடுதல் கமிஷனர் தலைமையில் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இதில், திருப்பூர் வணிக வரி இணை கமிஷனர் (நிர்வாகம்) முருககுமார், இணை கமிஷனர் (அமலாக்கம்) அருண்குமார், துணை கமிஷனர்கள் மகேஸ்வரன், சோபனா, நல்லரசி மற்றும் உதவி கமிஷனர்கள் பங்கேற்றனர்.வணிக வரி கோட்டத்தில் வரி வசூல் நிலவரம்; அமலாக்கப்பிரிவு மூலம் வசூலிக்கப்பட்டுள்ள அபராதம்; சமாதான் திட்டத்தில் முடித்துவைக்கப்பட்ட வழக்குகள்; வரி வசூல் உட்பட வரி சார்ந்த பல்வேறு அம்சங்கள் குறித்து, கூடுதல் கமிஷனர் ஆய்வு நடத்தினார்.திருப்பூர் வரி பயிற்சியாளர்கள் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் தலைமையில், பொருளாளர் மணிகண்டன் மற்றும் நிர்வாகிகள், கூடுதல் கமிஷனர் நாராயணனை சந்தித்து, கோரிக்கை மனு அளித்தனர்.வரி பயிற்சியாளர் கூட்டமைப்பு தலைவர் முத்துராமன் கூறியதாவது:திருப்பூரில் பின்னலாடை ஏற்றுமதியாளர்கள், உள்ளீட்டு வரி ரீபண்ட் கேட்டு விண்ணப்பிக்கும் வர்த்தகர்களுக்கு, வணிக வரித்துறை மூலம்ஜி.எஸ்.டி., ரீபண்ட் வழங்குவதில் காலதாமதம் ஏற்படுகிறது. சட்ட விதிகளுக்கு உட்பட்டு, 60 நாட்களுக்குள் ரீபண்ட் வழங்கவேண்டும். ஆனால், 90 நாட்களாகியும் ரீபண்ட் கொடுக்காமல் இழுத்தடிக்கின்றனர்.உரிய காலத்தில் ரீபண்ட் கிடைக்காததால், தொழில் துறையினர் பெரும் நிதி நெருக்கடியை சந்தித்துவருகின்றனர்.ஜி.எஸ்.டி., - 1 மற்றும் ஜி.எஸ்.டி., 3பி ஆகியவற்றை காலதாமதமாக தாக்கல் செய்வதற்கு, தினசரி 50 ரூபாய் என்கிற அடிப்படையில் தாமத கட்டணம் வசூலிக்கப்படுகிறது; அதற்கு பதிலாக, மாதம் 500 ரூபாயாக தாமத கட்டணத்தை குறைக்கவேண்டும் என, கோரிக்கை விடுத்துள்ளோம்.இவ்வாறு, அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ