உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / ஆஞ்சநேயர் கோவிலில் அறிவிப்பு பலகை

ஆஞ்சநேயர் கோவிலில் அறிவிப்பு பலகை

பல்லடம்:'தினமலர்' செய்தியால், மீட்கப்பட்ட ஆஞ்சநேயர் கோவில் முன், அறநிலையத்துறை அறிவிப்பு பலகை ஒன்றை வைத்துள்ளது.பல்லடம் அருகேயுள்ள மாதப்பூர் கிராமத்தில், பழமையான அனுமந்தராயர் கோவில் உள்ளது. ஹிந்து அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள இக்கோவில், பல நூறு ஆண்டுகளாக முட்புதருக்குள் மறைந்து காணப்பட்டது. இது குறித்து 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இதை தொடர்ந்து ஊராட்சி நிர்வாகத்தின் உதவியுடன் முட்புதர்கள் அகற்றப்பட்டு கோவில் மீட்கப்பட்டது. பழமையான கோவில் கருவறை, கல்வெட்டுகள், கல் துாண்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டன. பல நுாறு ஆண்டுகளுக்குப் பின் மீட்கப்பட்ட இக்கோவில் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டு கோவில் புதுப்பிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.அறநிலையத்துறை கண்டுகொள்ளாமல் விட்டதால், மீண் டும் புதர் மண்டி கோவில் மாயமாகி வந்தது. கடந்த சில தினங்களுக்கு முன், 'தினமலர்' நாளிதழில், இது குறித்து சுட்டிக் காட்டப்பட்டது.இதனால், கோவிலைச் சுற்றி வளர்ந்திருந்த பார்த்தீனியம் செடிகள் அகற்றப்பட்டு, தற்போது, கோவில் திருப்பணிகள் மேற்கொள்வதற்காக தொல்லியல் துறை அறிக்கை பெற்று நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக, அறநிலையத்துறை சார்பில் அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது.இது, வெறும் அறிவிப்போடு நின்று விடாமல், கோவிலை புதுப்பித்து பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை அறநிலையத்துறை மேற்கொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி