உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / அதிக கட்டணம் வசூலித்த மினி பஸ்களுக்கு நோட்டீஸ்

அதிக கட்டணம் வசூலித்த மினி பஸ்களுக்கு நோட்டீஸ்

திருப்பூர்;திருப்பூரில் இயங்கும் மினிபஸ்களில் டிக்கெட் கட்டணத்தை விட, கூடுதல் கட்டணம் வசூலிப்பதாக, தொடர்ந்து புகார்கள் வந்தவண்ணம் இருந்தன. இது குறித்து, 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது.இந்நிலையில், திருப்பூர் வடக்கு பகுதியில் இயங்கும், 67 மற்றும் தெற்கு பகுதியில் இயங்கும், 20 மினிபஸ்களின் பயணிகள் கட்டண வசூல் குறித்து, ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க, ஆர்.டி.ஓ., ஆனந்த், ஐந்து ஆய்வாளர் கொண்ட குழு ஒன்றை அமைத்தார்.இன்ஸ்பெக்டர்கள் நிர்மலா, பாஸ்கர், விஜயா, செந்தில்ராம், ஈஸ்வரன் ஆகியோர் அடங்கிய குழுவினர் கடந்த, 13ம் தேதி முதல் நேற்று (23ம் தேதி) வரை பத்து நாட்கள் அதிகாலை மற்றும் இரவில் இயங்கும் மினிபஸ்கள், அவற்றின் வழித்தடம் குறித்து தொடர் ஆய்வு பணியில் ஈடுபட்டனர்.அவ்வகையில், தெற்கில், ஏழு, வடக்கில், 12 என மொத்தம், 19 மினிபஸ்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவது கண்டறியப்பட்டு, பத்து நாட்களில் எச்சரிக்கை நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.ஆர்.டி.ஓ., ஆனந்த் கூறுகையில், 'நோட்டீஸ் வழங்கிய மினிபஸ்கள் விபரங்கள், கலெக்டர் பார்வைக்கு அனுப்பபடும். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில், அபராதம், பறிமுதல் உட்பட அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும்,' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை