உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / மாநில கால்பந்து போட்டி; ஊட்டி புளூஸ் அணி போராடி வெற்றி

மாநில கால்பந்து போட்டி; ஊட்டி புளூஸ் அணி போராடி வெற்றி

திருப்பூர்;திருப்பூரில் நடந்த கால்பந்து இறுதி போட்டி, டைபிரேக்கரில் முடிந்தது. வழங்கப்பட்ட கூடுதல் நேரத்தில் அசத்திய, ஊட்டி புளூஸ் அணி வெற்றி பெற்று, பாராட்டு பெற்றது.திருப்பூர் கால்பந்து கிளப் சார்பில், கால்பந்து போட்டி, அனுப்பர் பாளையம் அரசு மேல்நிலைப்பள்ளியில் கடந்த, ஜன., 26ம் தேதி துவங்கியது. தமிழகம் முழுவதும் இருந்து வந்த, 12 அணிகள் விளையாடின.நேற்று இறுதி போட்டிகள் நடந்தது. பொதுப்பிரிவுக்கான இறுதி போட்டியில், மவுண்ட் லிட்ரசி அணி, 5 - 4 என்ற கோல் கணக்கில், நீலகிரி புளூ அணியை வென்றது. வெட்ரன்ஸ், ஊட்டி புளூஸ் - திருப்பூர் 7எஸ் வெட்டரன்ஸ் அணிகளுக்கு இடையேயான போட்டி, 0 - 0 என்ற கோல் கணக்கில் டைபிரேக்கரில் நிறைவு பெற்றது.கூடுதல் நேரம் வழங்கப்பட்டதில், 1 - 0 என்ற கோல் கணக்கில், ஊட்டி புளூஸ் அணி, வெற்றி பெற்றது. வென்ற அணிக்கு, எம்.எல்.ஏ., செல்வராஜ், மேயர் தினேஷ்குமார் உட்பட பலர் கோப்பையை பரிசளித்தனர். மூன்றாவது இடத்தை மதுரை அணியும், நான்காவது இடத்தை திருப்பூர் அணியும் பெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை