உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / புறக்காவல் நிலையம் மா.கம்யூ., வேண்டுகோள்

புறக்காவல் நிலையம் மா.கம்யூ., வேண்டுகோள்

அனுப்பர்பாளையம்;மா.கம்யூ கட்சியின் வடக்கு ஒன்றிய செயலாளர் காளியப்பன், மாவட்ட குழு உறுப்பினர் சிகாமணி, ஒன்றிய குழு உறுப்பினர் தன்ராஜ் ஆகியோர் போலீஸ் கமிஷனர் பிரவீன்குமார் அபினபுவிடம் அளித்த மனு:திருப்பூர், நெருப்பரிச்சல் அரசு அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் கடந்த 2ம் தேதி சேகர், என்பவர் கொடுரமாக தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார். பாரதி நகர், மே நகர், குருவாயூரப்பன் நகர், வாவிபாளையம், நெருப்பரிச்சல், சேடர்பாளையம், உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ந்து பல்வேறு குற்ற சம்பவங்களும் நடைபெற்று வருகின்றன.இப்பகுதியில் போதை பொருள்கள் விற்பனை செய்யப்படுவதும் தொழில் நிறுவனங்களில் சமூக விரோதிகள் சென்று மிரட்டுவதும் வழிப்பறி உள்ளிட்ட குற்ற செயல்களும் சாலை விபத்துகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பொதுமக்கள், புகார் கொடுக்க சில 20 கி.மீ., துாரத்தில் உள்ள பூண்டி போலீஸ் ஸ்டேஷன் செல்ல வேண்டி உள்ளது. ஒரு லட்சம் மக்களுக்கு மேல் வசிக்கும் நெருப்பெரிச்சலில் புறக்காவல் நிலையம் அமைக்கப்பட வேண்டும். இவ்வாறு, அதில் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை