உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / பஸ் ஸ்டாண்டில் பயணியர் அவதி

பஸ் ஸ்டாண்டில் பயணியர் அவதி

உடுமலை;உடுமலை பஸ் ஸ்டாண்டில், பயணியருக்கு கூடுதல் இருக்கைகள் அமைக்க, நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.கோவை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அமைந்துள்ள உடுமலை பஸ் ஸ்டாண்டில், தினமும் நுாற்றுக்கணக்கான ஆயிரக்கணக்கில் பயணியர் வந்து செல்கின்றனர். பல்வேறு நகரங்களுக்கு செல்லும் புறநகர் பஸ்களும், கிராமங்களுக்கு செல்லும் டவுன்பஸ்கள் வந்து செல்கின்றன.ஆனால், பஸ் ஸ்டாண்டில் பயணியருக்கு போதுமான இருக்கை வசதிகள் இல்லை. இதனால், அவர்கள் பஸ்சுக்காக காத்திருக்கும் போது, நீண்ட நேரம் நிற்க வேண்டியதுள்ளது. பெண்களும், குழந்தைகளும் சிரமத்துக்குள்ளாகின்றனர்.எனவே, மக்கள் நலன் கருதி, பஸ் ஸ்டாண்டில் கூடுதல் இருக்கை வசதி செய்து தர உடுமலை நகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை