உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் /  மீன் வாங்க மக்கள் ஆர்வம்

 மீன் வாங்க மக்கள் ஆர்வம்

தென்னம்பாளையம் மீன் மார்க்கெட்டில் வெளி மாவட்டத்தில் மீன்கள் கொண்டுவரப்பட்டு மொத்த, சில்லறை விற்பனை செய்யப் படுகிறது. ஒவ்வொரு வாரமும், 40 முதல், 50 டன் வரை மீன் வரத்து இருக்கும். வார இறுதி நாட்களில் விற்பனையும் ஜோராக நடக்கும். கார்த்திகை மாதம் இன்று பிறக்க உள்ள நிலையில், நேற்று வழக்கத்தை விட மீன் மார்க்கெட்டில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தது. 50 டன் வந்தது. ஒரு கிலோ மத்தி மீன் 120 ரூபாய்க்கும், விலா மீன், 300, வாவல், 1,000, கெழுத்தி, 200, வஞ்சிரம், 800 ரூபாய் என்று விற்பனையானது. இறைச்சி கடைகளிலும் கூட்டம் அதிகமாக இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி