உள்ளூர் செய்திகள்

போலீஸ் டைரி

ரோட்டில் குட்கா பொருட்கள்

பல்லடம் -- உடுமலை ரோடு வடுகபாளையம்புதுார் ஊராட்சி எல்லையில், மூட்டை நிறைய குட்கா பொருட்கள், ரோட்டில் சிதறி கிடந்தன. இதனை கைப்பற்றிய போலீசார் கூறுகையில், 'வாகனம் மூலம் கடத்திச் செல்லும் போது, போலீசாரிடமிருந்து தப்பிக்க வேண்டி ரோட்டில் வீசி சென்று இருக்கலாம். அல்லது, இப்பகுதியில் உள்ள ஏதாவது குடோன்களில் பதுக்கி வைக்கப்பட்டு வெளியே வீசி இருந்திருக்கவும் வாய்ப்பு உள்ளது. இது குறித்து விசாரித்து வருகிறோம்,' என்றனர்.

வாகன விபத்தில் பெண் பலி

பெருமாநல்லுார், கருக்கன்காட்டுத்தோட்டம் பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன், பனியன் தொழிலாளி. இவரின் மனைவி ஆஷா, 28. மகன் மவுலிஷ், 2 வயது. நேற்று காலை, மொபட்டில் மூவரும், திருப்பூர் ஐயப்பன் கோவிலுக்கு சென்றுக் கொண்டிருந்தனர். பிச்சாம்பாளையம் பகுதியில், மாநகராட்சி குப்பை லாரி மோதியது. இதில், ஆஷா, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். மற்ற இருவரும், காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். பெருமாநல்லுார் போலீசார் விசாரிக்கின்றனர்.

குடும்ப தகராறில் தற்கொலை

ஊதியூர் அருகேயுள்ள எஸ்.வி., புரத்தை சேர்ந்தவர் அருண்பிரகாஷ், 38; இவரது மனைவி பனிமொழி, 31. இரு குழந்தைகள் உள்ளனர்.அடிக்கடி குடும்பத்தில் தகராறு இருந்துவந்துள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம், பனிமொழி, துாக்குமாட்டி தற்கொலை செய்து கொண்டார். ஊதியூர் போலீசார் விசாரிக்கின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ