| ADDED : டிச 06, 2025 05:38 AM
அவிநாசி: அவிநாசி நகராட்சி கூட்டம், தலைவர் தனலட்சுமி தலைமையில் நடந்தது. கமிஷனர் (பொறுப்பு) அருள் பங்கேற்றார். கூட்டத்தில் கவுன்சிலர்கள் பேசியதாவது: ஸ்ரீதேவி (அ.தி.மு.க.): கைகாட்டிப்புதுார் எக்ஸ்டென்ஷன் வீதியில் உள்ள தபால் நிலையம் பழுதடைந்துள்ளது. கைகாட்டிப்புதுார், அவிநாசிலிங்கம் பாளையம் வீதியில் உள்ள ரேஷன் கடை அருகே சிறிய இடம் ஒதுக்கினால் அப்பகுதியினர் நிதி திரட்டி புதிதாக தபால் நிலையம் கட்டித்தர தயாராக உள்ளனர். அனுமதி தர வேண்டும். திருமுருகநாதன் (தி.மு.க.): தமிழக அரசால் நியமிக்கப்பட்ட நியமன உறுப்பினர்கள் கூட்டத்தில் கலந்துகொள்ள வசதியாக, நகராட்சி அலுவலகத்தில் லிப்ட் அல்லது ரேம்ப் அமைக்கப்பட வேண்டும். முன்னதாக கைகாட்டிப்புதுாரை சேர்ந்த சரஸ்வதி என்பவர், மாற்றுத்திறனாளிகள் நியமன உறுப்பினராக பொறுப்பேற்றார். அவருக்கு நகராட்சி கவுன்சிலர்கள் வாழ்த்து தெரிவித்தனர். நகராட்சி தலைவர் தனலட்சுமி கூறும்போது, ''விரைவில் அந்தந்த வார்டு பகுதிகளில் பொதுமக்கள் அளித்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும்'' என்றார்.