உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / திருப்பூர் / இளம் வாக்காளருடன் பிரதமர் பேச்சு!

இளம் வாக்காளருடன் பிரதமர் பேச்சு!

திருப்பூர்:பிரதமர் மோடி, காணொலி காட்சிவாயிலாக நேற்று, இளம் வாக்காளர்களுடன் நேற்று கலந்துரையாடினார்.கடந்த, 22ம் தேதி, வாக்காளர் இறுதி பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதில், 18 வயது பூர்த்தியான இளம்வாக்காளர் அதிக எண்ணிக்கையில் சேர்க்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், பிரதமர் மோடி, இளம் வாக்காளர்களுடன் நேற்று நாடு முழுவதும் முக்கிய மையங்கள் வாயிலாக, காணொலியில் கலந்துரையாடினார்.அவ்வகையில், திருப்பூர் மாவட்ட பா.ஜ., தலைவர் செந்தில்வேல் தலைமையில், அவிநாசி ரோடு, கருப்பராயன் கோவில் மண்டபம், பாரதி மெட்ரிக் பள்ளி, ஊத்துக்குளி ரோடு நைருதி பள்ளி மற்றும் பா.ஜ., அலுவலகம் ஆகிய இடங்களில், இளம் வாக்காளர்களுடன் பிரதமர் மோடி கலந்துரையாடும் காணொலிஒளிபரப்பப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை